திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சுவாமி அலைவாயுகந்த பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி காட்சி அளித்தார்.
திருச்செந்தூர்,
பரிவேட்டை நிகழ்ச்சி
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் அதிகாலையில் கோவில் நடைதிறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடந்தன. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 5.30 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தன.
மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பின்னர் பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. சுவாமி அலைவாயு கந்தபெருமான் வெள்ளிக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
கடற்கரையில் கூட்டம்
பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள வேட்டை வெளி மண்டபத்திற்கு சென்றார். அங்கு பரிவேட்டை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி ரதவீதி, சன்னதித்தெரு வழியாக கோவிலை சேர்ந்தார்.
ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோட்டை மணிகண்டன், இணை ஆணையர் வரதராஜன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
இதேபோல், காணும் பொங்கலை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் திரளான மக்கள் குவிந்தனர்.

Next Story