கட்டபொம்மன் கோட்டையில் காணும் பொங்கல் கொண்டாடிய சுற்றுலா பயணிகள்
ஓட்டப்பிடாரம் அருகே நேற்று கட்டபொம்மன் நினைவு கோட்டையில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து காணும் பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
ஓட்டப்பிடாரம்,
காணும் பொங்கல்
ஓட்டப்பிடாரம் அருகே பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு ஆண்டுதோறும் காணும் பொங்கலையொட்டி ஏராளமான மக்கள் வருவது வழக்கம். இந்த ஆண்டும் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குடும்பத்தோடு வந்தனர்.
காணும் பொங்கலையொட்டி சுற்றுலாத்துறை சார்பில் பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. அதன்படி மாவட்ட அரசு இசைப்பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், இன்னிசை கச்சேரி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. கோட்டையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் வாழ்க்கையை சித்தரிக்கும் படங்களை பார்வையிட்டனர். முன்னதாக மாவட்ட சுற்றுலா அலுவலர் சீனிவாசன் தலைமையில் ஓட்டப்பிடாரம் தாசில்தார் முருகானந்தம், யூனியன் ஆணையாளர் கிரி ஆகியோர் கோட்டையில் உள்ள கட்டபொம்மன் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கோட்டையில் உள்ள அவருடைய குலதெய்வமான வீரசக்கதேவி ஆலயத்தில் கோமாதா பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து பொங்கல் வைத்து சுற்றுலா பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
விழாவில் வீரசக்க தேவி ஆலய தலைவர் முருகபூபதி, செயலாளர் மல்லுசாமி, வீரபாண்டிய கட்டபொம்மன் நேரடி வாரிசு ஜெகவீரபாண்டிய சுப்பிரமணியகட்டபொம்முதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சிறப்பு பஸ்கள்
அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தூத்துக்குடியில் இருந்து, புதியம்புத்தூர் மற்றும் குறுக்குச்சாலை வழியாக பாஞ்சாலங்குறிச்சிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விழாவையொட்டி ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Next Story