தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதி
தூத்துக்குடியில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
தூத்துக்குடி,
குடிநீர் தட்டுப்பாடு
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. 20 நாட்களுக்கு ஒருமுறை குழாய் மூலம் குடிநீர் வினியோகிக்கப்பட்டு வந்தது. தற்போது, தாமிரபரணி ஆற்றில் வறட்சி நிலவுவதால், அங்கு அமைக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் கொண்டு வர இயலாத நிலை உள்ளது. இதனால் தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளும் வறண்டு கிடக்கின்றன.
குடத்துடன்....
இதைத் தொடர்ந்து மாநகராட்சி லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்படி நீர்த்தேக்க தொட்டி அருகே குடிநீர் லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. ராஜாஜி பூங்கா குடிநீர் தேக்க தொட்டியில் நேற்று காலை முதல் கூட்டம் அலைமோதியது.
களையிழந்தது
குடிநீர் தட்டுப்பாட்டால் ராஜாஜி பூங்காவுக்கு மக்கள் வருகை குறைந்து காணப்பட்டது. காணும் பொங்கலுக்காக ராஜாஜி பூங்காவுக்கு வந்தவர்கள், கையில் குடத்துடன் வந்தனர். அவர்கள் வரிசையில் குடத்தை வைத்து விட்டு பூங்காவில் குடும்பத்தோடு அமர்ந்து காணும் பொங்கலை கொண்டாடினர். குடிநீர் பிரச்சினையால் காணும் பொங்கல் களையிழந்தது.

Next Story