அ.தி.மு.க. பிரமுகர் கார் தீயில் எரிந்து சாம்பலானது


அ.தி.மு.க. பிரமுகர் கார் தீயில் எரிந்து சாம்பலானது
x
தினத்தந்தி 16 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. பிரமுகர் கார் தீயில் எரிந்து சாம்பலானது

தட்டார்மடம்,

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உள்ள படுக்கப்பத்து கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (வயது 53). இவர் அ.தி.மு.க. ஊராட்சி கழக செயலாளராக உள்ளார். இவருக்கு அந்த பகுதியில் சொந்தமாக பெட்டிக்கடை உள்ளது. இந்த பெட்டிக்கடை அருகேயுள்ள காலி இடத்தில் நேற்று முன்தினம் இரவு தனது காரை குமரேசன் நிறுத்தி இருந்தார். நேற்று அதிகாலை 3 மணிக்கு, குமரேசனின் கார் திடீரென எரிவதாக அவருக்கு தகவல் கிடைத்தது. அவர் அப்பகுதிக்கு சென்றபோது, கார் முற்றிலும் எரிந்து சாம்பலாகி இருந்தது.

இதுகுறித்து குமரேசன் அளித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story