அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு


அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு
x
தினத்தந்தி 16 Jan 2017 2:58 AM IST (Updated: 16 Jan 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

அரசமரத்தடி விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

தா.பழூர்,

சங்கடஹரசதுர்த்தியையொட்டி அரியலூர் மாவட்டம் தா.பழூரில் உள்ள அரசமரத்தடி விநாயகர் கோவிலில் நேற்று திரவியப்பொடி, மஞ்சள், பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர் அருகம்புல் மற்றும் செவ்வரளி, செம்பருத்தி போன்ற மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் தா.பழூர் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல தா.பழூர் பகுதிக்கு உட்பட்ட பல்வேறு விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Next Story