ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு


ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 2:58 AM IST)
t-max-icont-min-icon

ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி, திருமானூர் அருகே ஆர்ப்பாட்டத்துக்கு கொண்டு வரப்பட்ட காளைகளை அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமானூர்,

காளைகளுடன் ஆர்ப்பாட்டம்

தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு மத்திய, மாநில அரசுகள் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரி அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த காணிக்கைபுரம் ரெயில்வேகேட் அருகே ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் லூர்துசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரப்பிரசாதம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நெப்போலியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலாளர் செல்லத்துரை, மாவட்ட தலைவர் மணியன், மாவட்ட துணைத்தலைவர் பிச்சைப்பிள்ளை மற்றும் ஜல்லிக்கட்டு பேரவையினர் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கையில் கருப்பு கொடியுடனும், சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும் காளை மாடுகளுடன் வந்திருந்தனர்.

அவிழ்த்து விட்டதால் பரபரப்பு

ஆர்ப்பாட்டத்தின்போது, தமிழர்களின் வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்த மத்திய, மாநில அரசுகளே அனுமதி கொடு என கோஷங்கள் எழுப்பினர் ஆர்ப்பாட்டத்திற்கு கொண்டு வரப்பட்ட காளைகளை இளைஞர்கள் திடீரென அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்ப்பாட்டத்தையொட்டி கீழப்பழுவூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Next Story