பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கருப்புக்கொடி ஏற்றியும், கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மங்களமேடு,
கருப்புக்கொடி ஏற்றி போராட்டம்
தமிழக அரசு அறிவித்தபடி, கரும்புக்கான நிலுவை தொகையை தராததை கண்டித்து பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கருப்பு கொடி ஏற்றியும், கண்களை கருப்பு துணியால் கட்டிக்கொண்டும் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள், தனியார் சர்க்கரை ஆலைகள் முன்பு கடந்த வாரம் 3 நாட்கள் விவசாயிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அவர்களிடம் தமிழக அரசு சார்பில் துறை சார்ந்த அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொங்கலுக்குள் கரும்புக்கான நிலுவைத்தொகையில் பாதித் தொகை வழங்குவதாக அரசு தரப்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டது. இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், விவசாயிகளுக்கு நிலுவைத்தொகை இதுவரை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், நிலுவைத்தொகையை உடனே வழங்கக்கோரியும் பெரம்பலூர் சர்க்கரை ஆலை முன்பு தமிழக விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் விவசாயிகள் கருப்பு கொடி ஏற்றியும், கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் விவசாயிகள் அனைவரும் தங்களது வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
வாக்குவாதம்
இதுகுறித்து விவசாயிகள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், தமிழக அரசு அறிவித்தபடி விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகை இன்னும் வழங்கப் படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் வயலூர், வதிஷ்டபுரம், துங்கபுரம், புதுவேட்டக்குடி, அத்தியூர், திருமாந்துறை உட்பட பல தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பயிர்களுக்கான இன்சூரன்ஸ் பிரிமியம் தொகையை வங்கி ஊழியர்கள் வாங்க மறுக்கின்றனர். இதனால், விவசாயிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இது விவசாயிகளைஅதிர்ச்சியடைய செய்துள்ளது. தமிழக அரசு, 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள்ளது. விவசாய பயிர்களுக்கு அரசு வழங்கியுள்ள நிவாரண தொகை போதுமானதாக இல்லை. எனவே, நிவாரண தொகையை உயர்த்தி தரவேண்டும், கரும்புக்கான நிலுவைத்தொகையை உடனே வழங்க ஆலை நிர்வாகம் முன்வர வேண்டும் என்றார்.

Next Story