போதைப்பொருள் வைத்திருந்த பெண் உள்பட 3 பேர் கைது
வேளாங்கண்ணி அருகே போதைப்பொருள் வைத்திருந்த பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வேளாங்கண்ணி,
போதைப்பொருள்
நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை உத்தரவின்படியும், துணை போலீஸ் சூப்பிரண்டு அன்பு அறிவுறுத்தலின்பேரில் வேளாங்கண்ணி போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேளாங்கண்ணியை அடுத்த வண்டலூர் ரோட்டு தெரு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த அதேபகுதியை சேர்ந்த தம்பி ராஜேந்திரன் (வயது55) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
3 பேர் கைது
அப்போது அவர் 550கிராம் டயோசிபார்ம் என்ற போதைப்பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. அதையடுத்து போலீசார் தம்பிராஜேந்திரனை கைது செய்து, அவர் வைத்திருந்த போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் செம்பியன்மாதேவி மெயின்ரோடு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அதேபகுதியை சேர்ந்த தமிழ்மணி மனைவி கலா (40), அகலங்கண் மேலத்தெரு பகுதியில் போதைப்பொருள் வைத்திருந்த அதேபகுதியை சேர்ந்த நொண்டிசுந்தரமூர்த்தி (51) ஆகியோரையும் போலீசார் கைது செய்து, அவர்கள் வைத்திருந்த தலா 550 கிராம் வீதம் 1,100 கிராம் டயோசிபார்ம் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும், இதுகுறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story