அ.தி.மு.க.வை அழிக்க முடியாது சசிகலா சகோதரர் திவாகரன் பேச்சு
எந்தவித பலனையும் எதிர்பார்க்காமல் கட்சியை காப்பாற்றி வருகிறோம், இலக்கிய பொங்கல் விழாவை தொடங்கி வைத்து செங்கமலத்தாயார் அறக்கட்டளை நிறுவனரும் சசிகலா சகோதரருமான திவாகரன் கூறினார்.
தஞ்சாவூர்,
பொங்கல் திருவிழா
தஞ்சை தமிழ்ச்சங்கம், மருதப்பா அறக்கட்டளை சார்பில் தமிழர் கலை இலக்கிய பொங்கல் திருவிழா கடந்த 17 ஆண்டுகளாக தஞ்சையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 18-ம்ஆண்டு பொங்கல் திருவிழா 3 நாட்கள் நடைபெறுகிறது. கல்யாணபுரம் கே.ஜி.குழுவினரின் மங்கள இசையுடன் விழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உருவப்படத்துக்கு மலர் அஞ்சலி செலுத்தப் பட்டது.
பின்னர் நடந்த தொடக்க விழாவிற்கு புதிய பார்வை ஆசிரியர் ம.நடராசன் தலைமை தாங்கினார். ராமர்இளங்கோ வரவேற்றுப்பேசினார். விழாவை மன்னார்குடி செங்கமலத்தாயார் அறக்கட்டளை நிறுவனரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரருமான திவாகரன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறிய தாவது:-
ஜெயலலிதா மறைவுக்குப்பின்னர் பெரிய கொந்தளிப்பு ஏற்பட்டது. அரசியலில் மாற்றம் ஏற்படும் என்று கூறினார்கள். ஆனால் எதுவும் ஏற்படவில்லை. அ.தி.மு.க. அரசு தொடர்ந்து செயலாற்றி வருகிறது. அ.தி.மு.க. தொடங்கியது முதல் அதன் வரலாற்றில் தஞ்சையின் பங்கு தொடர்ந்து கொண்டிருக்கிறது. அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கிய போது அவருக்கு உறுதுணையாக இருந்தவர் தஞ்சையை சேர்ந்த எஸ்.டி.எஸ். தான். இதை யாரும் மறுக்க முடியாது. திண்டுக்கல்லில் தேர்தல் நடந்த போது அந்த தேர்தலில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக தஞ்சையில் இருந்தும், மன்னார்குடியில் இருந்தும் சென்று பாடுபட்டோம். அப்போது எங்களை சிலர் அடித்தனர். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான்கள் அல்ல நாங்கள். இந்த அ.தி.மு.க.வை உருவாக்கியதில் உங்கள் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு.
அ.தி.மு.க.வை அழிக்க சதி
அ.தி.மு.க.வை அழிக்க சதி நடக்கிறது. ஆனால் அது முடியாது. அதையும் மீறி நடந்தால் எங்கள் பிணம் மீது தான் நடக்கும். 2011-ல் ஜெயலலிதாவிடம் இருந்து எங்களை வெளியேற்ற சதி நடந்தது. ஆனால் நடக்கவில்லை. அப்படி முழுவதும் வெளியேற்றி விட்டால் ஜெயலலிதாவை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என்று எண்ணினர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வின் தலைமை பொறுப்புக்கு ஜெயலலிதாவை கொண்டு வந்தது புதிய பார்வை ஆசிரியர் நடராசன் தான். இரட்டை இலை சின்னத்தை முடக்கினர். ஆனால் ஜெயலலிதா, ஜானகி என 2 அணிகளையும் இணைத்து முடங்கிப்போன இரட்டைஇலை சின்னத்தை மீட்டு எடுத்தவர் நடராசன். ஜெயலலிதாவை எதிர்க்கட்சி தலைவராக்கி, பின்னர் முதல்-அமைச்சர் ஆக்கினார். நாங்கள் எந்தவித எதிர்ப்பார்ப்பு, பலனும் இல்லாமல் இந்த இயக்கத்தை காப்பாற்றி வருகிறோம்.
இன்னும் ஏகப்பட்ட பிரச்சினைகள் உள்ளன. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல்கள் வருகின்றன. இந்த உயிரையும் துச்சமென்று மதித்து ஜெயலலிதா கூறியது போல அ.தி.மு.க.வை 100 ஆண்டுகள் கொண்ட கட்சியாக உருவாக்க பாடுபட்டு வருகிறோம். இப்போதும் சிலர் கட்சியினரை குழப்ப முயற்சி செய்து வருகிறார்கள். தமிழர்களுக்கு அநியாயம் நடக்கிறது. ஜல்லிக்கட்டில் கூட நம்மை ஏமாற்றி விட்டார்கள். எனவே நாம் அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து அ.தி.மு.க.வை காப்பாற்றி நல்ல தமிழர் சமுதாயத்தை உருவாக்க படுபட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பாலே நடனம்
விழாவில் சென்னை ரஷ்ய தூதரக உதவி தூதர் எவ்கேனிக்ராப்சென்கோ, கனடா நாட்டை சேர்ந்த சில்வர்ஸ்டார் ராஜரத்தினம், மலேசிய தூதர் அப்துல்ஜலீல், ஜனாதிபதி பிரணாப்முகர்ஜியின் உறவினர் கிருஷ்ணமோகன்ஜி, முன்னாள் கேப்டன் அருண்சக்கரவர்த்தி, விளார்சாமிநாதன், லண்டன் டாக்டர் தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் விடுதலைவேந்தன் நன்றி கூறினார்.
அதைத்தொடர்ந்து தகதிமிதா புகழ் ராதிகாசூரஜித் குழுவினர் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சியும், ரஷ்ய நாட்டு கலைக்குழுவினர் வழங்கிய பாலே நடன நிகழ்ச்சியும் நடந்தது.
2-வது நாள் நிகழ்ச்சி
நேற்று 2-வது நாளாக காலை 9 மணிக்கு ஆத்மநாதன் குழுவினரின் தமிழிசை நிகழ்ச்சியும், 11 மணிக்கு பேராசிரியர் ஞானசம்பந்தன் தலைமையில் வாழ்க்கை இனிய பூந்தோட்டமா? அல்லது நெடிய போராட்டமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. மதியம் 3 மணிக்கு மதி கலைக்குழுவினர் வழங்கிய தப்பாட்ட நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு நாற்காலிகள் பேசுகின்றன என்ற தலைப்பில் கவிஞர் பாரதன் தலைமையில் கவியரங்கமும் நடைபெற்றது.
மாலை 6 மணிக்கு தயா குழுவினர் வழங்கிய மந்திரமா? தந்திரமா? மேஜிக் நிகழ்ச்சியும், இரவு 7.30 மணிக்கு பிரியா குழுவினர் வழங்கிய பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரவு 9 மணிக்கு ஓ.வி.எம். நடன குழு வழங்கிய வேலுநாச்சியார் தமிழ்மண்ணின் வீரவரலாறு நிகழ்ச்சியும் நடந்தது. இன்று (திங்கட்கிழமை) 3-வது நாள் நிகழ்ச்சிகள் நடை பெறுகின்றன.

Next Story