அதிக கட்டணம் வசூலித்த 10 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
வட்டார போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், பொங்கல் பண்டிகையையொட்டி அதிக கட்டணம் வசூலித்ததாக 10 ஆம்னி பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ஆரல்வாய்மொழி,
அதிரடி சோதனை
பொங்கல் பண்டிகையையொட்டி குமரி மாவட்டத்தில் ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதுதொடர்பாக உண்மை நிலையை கண்டறிய நாகர்கோவில், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி, நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி ரஜினிகாந்த், ஆய்வாளர் ஆனந்த், உதவியாளர் ரமேஷ் மற்றும் ஊழியர்கள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காவல்கிணற்றில் இருந்து நாகர்கோவில் ஒழுகினசேரி வரை முக்கிய இடங்களில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த வழியாக சென்ற 4 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததும், தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த 4 ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மார்த்தாண்டம்
இதுபோல், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அதிகாரி திருமுருகன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கனகவல்லி, சீனிவாசன் மற்றும் உதவியாளர்கள் களியக்காவிளையில் இருந்து பார்வதிபுரம் வரை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த 6 ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலித்ததும், தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்டதும் தெரிய வந்தது. இதைதொடர்ந்து, அந்த 6 ஆம்னி பஸ்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுபோன்ற சோதனைகள் தொடரும் என்றும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.

Next Story