கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை
கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
கன்னியாகுமரி,
மேலும், பொங்கல் விடுமுறையையொட்டி கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.
திருவள்ளுவர் தினம்
கன்னியாகுமரி கடலுக்குள் அமைந்துள்ள பாறையில் 133 அடி உயரத்தில் பிரமாண்டமான திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. திருவள்ளுவர் தினத்தையொட்டி நேற்று இந்த திருவள்ளுவர் சிலை பாதத்தில் தமிழ் அறிஞர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
குமரி மாவட்ட திருக்குறள் ஆய்வு மையம் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு அதன் தலைவர் கேசவ சுப்பையா தலைமை தாங்கினார். இதில் திருவள்ளுவர் அறக்கட்டளை உள்பட 12 தமிழ் ஆய்வுக்கழக தமிழ் அறிஞர்கள் தனிப்படகில் சென்று கலந்து கொண்டனர். முன்னதாக கன்னியாகுமரி முக்கடல் சங்கம கடற்கரையில் உள்ள திருக்குறள் சுடர் முன்பு திருக்குறள் முற்றோதுதல் நடந்தது. நிகழ்ச்சியில், தமிழ்நாடு காமராஜர் நற்பணி மன்ற தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், திருவள்ளுவர் அறக்கட்டளை பொருளாளர் வள்ளி மணாளன், காங்கிரஸ் கலை இலக்கிய அணி மாநில செயலாளர் அந்தோணி முத்து, காவடியூர் சிவ நாராயண பெருமாள், திருவள்ளுவர் குருபூஜை மன்ற செய்தி தொடர்பாளர் மாணிக்கவாசகம் பிள்ளை, ராஜ்குமார், ஆசிரியை பாக்கிய சோனியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுற்றுலா பயணிகள் கூட்டம்
பொங்கல் விடுமுறையையொட்டி நேற்று கன்னியாகுமரி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் முக்கடல் சங்கமம் கடற்கரையில் புனித நீராடிவிட்டு பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.
கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், காமராஜர் மண்டபம், கடற்கரை பூங்கா பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. படகு மூலம் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்திற்கு சென்று ரசித்தனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் காரணமாக காலை 6 மணிக்கே படகு போக்குவரத்து தொடங்கியது.
சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் பார்த்து விட்டு ஊர் திரும்பும் அய்யப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வந்தனர். இதனால், கன்னியாகுமரியில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story