பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பாண்டியாறு–புன்னம்புழா திட்டத்தை நிறைவேற்றக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 16 Jan 2017 4:30 AM IST (Updated: 16 Jan 2017 3:26 AM IST)
t-max-icont-min-icon

பாண்டியாறு–புன்னம்புழா, அவினாசி–அத்திக்கடவு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்று கோரி கோபி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடத்தூர்,

ஆனால் இந்த திட்டத்தை இதுவரை அரசு நிறைவேற்றவில்லை. இந்த நிலையில் பாண்டியாறு–புன்னம்புழா, அவினாசி–அத்திக்கடவு திட்டங்களை நிறைவேற்றக்கோரி கோபி அருகே உள்ள அங்கம்பாளையத்தை சேர்ந்த விவசாயிகள் ஒன்று திரண்டு சிறுவலூர்–வெள்ளாங்கோவில் ரோட்டுக்கு நேற்று பகல் 11 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் தலைமையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி அறிந்ததும் சிறுவலூர் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், ‘இந்த திட்டங்களை நிறைவேற்றுவது குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும்’ என்று தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்த விவசாயிகள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து மதியம் 12 மணி அளவில் கலைந்து சென்றனர். இதன்காரணமாக சிறுவலூர்–வெள்ளாங்கோவில் ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story