துரோகிகள் மற்றும் தந்திரமான நண்பர்களிடம் ஜாக்கிரதையாக இருங்கள் கட்சியினர் இடைய உத்தவ் தாக்கரே பரபரப்பு பேச்சு
மும்பை மாநகராட்சி தேர்தல் பிப்ரவரி 21–ந் தேதி நடைப்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது
மும்பை
மும்பை மாநகராட்சி தேர்தல் அடுத்த மாதம்(பிப்ரவரி) 21–ந் தேதி நடைப்பெற இருக்கிறது. இந்த தேர்தலில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணியில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கூட்டணி பேச்சுவார்த்தை இன்று தொடங்கும் என தெரிகிறது. இந்த நிலையில் நேற்று மாதோஸ்ரீ இல்லத்தில் கட்சி தொண்டர்களிடேயே பேசிய சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பா.ஜனதாவின் பெயரை கூறிப்பிடாமல் அக்கட்சியை சாடினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘ நாம் துரோகம் மற்றும் தந்திரம் நிறைந்த நண்பர்களை எதிர்த்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளோம். காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து நம்மில் இருந்து பிரிந்துசென்ற சிலரும் இதில் அடங்குவார்கள்.
இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார்.
கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட இந்த பரபரப்பான சூழ்நிலையில் உத்தவ் தாக்கரேவின் பேச்சு இரு கட்சிகளிடேயே நிலவும் பனிப்போரை மீண்டும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.