திருவேற்காட்டில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி
திருவேற்காடு தம்புசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி. காவலாளியாக வேலை செய்து வருகிறார்.
பூந்தமல்லி
திருவேற்காடு தம்புசாமி நகர், 1-வது தெருவைச் சேர்ந்தவர் உமாபதி. காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி யசோதா (வயது 34). இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.
யசோதா, கடந்த மாதம் திருமழிசையில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு அவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. அவரை பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக போரூரில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலன் இன்றி யசோதா, நேற்று காலை பரிதாபமாக இறந்தார்.
யசோதா திருவேற்காட்டில் இருக்கும் போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதா? அல்லது தாய் வீடான திருமழிசைக்கு வந்த பிறகு காய்ச்சல் ஏற்பட்டதா? என இரண்டு பகுதி மக்களும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மர்ம காய்ச்சல் பரவுவதை தடுக்க இந்த பகுதிகளில் சுகாதார துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Next Story