அழைப்பு உங்களுக்குத்தான்


அழைப்பு உங்களுக்குத்தான்
x
தினத்தந்தி 16 Jan 2017 12:24 PM IST (Updated: 16 Jan 2017 12:24 PM IST)
t-max-icont-min-icon

பாரதிதாசன் பல்கலைக்கழகம் : திருச்சியில் செயல்படும் பாரதி தாசன் பல்கலைக்கழகத்தில் உதவியாளர், அலுவலக உதவியாளர், ஓட்டுனர், தோட்டப் பணியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

உதவியாளர் பணிக்கு பட்டதாரிகளும், இதர பணிகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் விண்ணப்ப படிவத்தை www.bdu.ac.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து 23-1-2017-ந் தேதிக்குள் சென்றடையும்படி அனுப்ப வேண்டும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள முகவரியில் பார்க்கலாம்.

இந்தியன் ஆயில் : இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பானிபட் சுத்திகரிப்பு ஆலையில் ஜூனியர் என்ஜினீயரிங் அசிஸ்டன்ட் பணிக்கு 32 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பயர்சேப்டி, இன்ஸ்ட்ருமென்டேசன், பவர்யூடிலிட்டிஸ், ஆபரேசன் அண்ட் மெயின்டனன்ஸ், மெக்கானிக்கல் பிட்டர், புரொடக்சன் போன்ற பிரிவுகளில் பணிகள் உள்ளன. 3 ஆண்டு டிப்ளமோ படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விரிவான விவரங்களை
www.iocrefrecruit.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 29-1-2017-ந் தேதி.

ஆவின் : ஆவின் பால் நிறுவனத்தின் ஈரோடு மாவட்ட பிரிவில் மேனேஜர் மற்றும் டெபுடி மேனேஜர் பணிக்கு 4 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மற்றொரு அறிவிப்பின்படி ஜூனியர் எக்சிகியூட்டிவ் ஆபீசர், ஹெவி வெகிகிள் டிரைவர், டெக்னீசியன் உள்ளிட்ட பணிகளுக்கு 17 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை பற்றிய விரிவான விவரங்களை
www.aavinmilk.com
என்ற இணையதளத்தில் பார்க்கலாம். விருப்பம் உள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி, தேவையான சான்றுகளை இணைத்து, 8-2-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்பலாம்.

பி.இ.எல். :
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பி.இ.எல்) நிறுவனத்தில் ஹவில்தார் பணிகளுக்கு 15 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள். இது முன்னாள் படைவீரர்களுக்கான பணியிடங் களாகும். விண்ணப்பதாரர் 28 வயது பூர்த்தியாகி இருப்பதுடன், குறிப்பிட்ட வருடம் படைவீரராக பணியாற்றியிருக்க வேண்டும். இது பற்றிய விவரங்களை
www.belindia.com/careers
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்கள் 4-2-2017-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும்.

ரெயில்வே : ரெயில்வே அமைப்பின் துணை நிறுவனங்களில் ஒன்றான ரிட்ஸ் நிறுவனத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயர் பணிக்கு 28 பேர் தேர்வுசெய்யப்படுகிறார்கள். 32 வயதுக்கு உட்பட்ட, மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்த விண்ணப்பதாரர்கள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். அத்துடன் தேவையான சான்றுகளை கொண்டு சென்று தேர்வில் பங்கேற்கலாம். விண்ணப்பிக்க 16-1-2017 கடைசி நாளாகும். 21-1-2017-ந் தேதி எழுத்துத் தேர்வு, 22-1-2017-ந் தேதி நேர்காணலும் நடைபெறுகிறது. இது பற்றிய விவரங்களை
www.rites.com
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

சென்னை ஐ.ஐ.டி. : சென்னை ஐ.ஐ.டி. கல்வி மையத்தில் ஜூனியர் டெக்னிக்கல் சூப்பிரண்டன்ட், செக்யூரிட்டி கார்டு உள்ளிட்ட பணிகளுக்கு 43 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் விரிவான விவரங்களை
www.iitm.ac.in
என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.100 கட்டணம் செலுத்தி, 20-1-2017-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பமும், 27-1-2017-ந் தேதிக்குள் நகல் விண்ணப்பமும் சமர்ப்பிக்க வேண்டும். விரிவான விவரங்களை
www.iitm.ac.in
என்ற இணையதளத்தில் காணலாம்.

ஏற்றுமதி ஆய்வு கழகம்: மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஏற்றுமதி ஆய்வுக்கழகத்தில் (EIC) 44 பணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெக்னிக்கல் ஆபீசர் பணிக்கு 35 இடங்கள், செக்சன் ஆபீசர் பணிக்கு 7 இடங்கள், அக்கவுண்ட்ஸ் ஆபீசர் பணிக்கு 2 இடங்கள் உள்ளன. என்ஜினீயரிங்/ டெக்னாலஜி படித்தவர்கள் மற்றும் இதர பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விரிவான விவரங்களை
www.eicindia.gov.in
என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
விருப்பம் உள்ளவர்கள் ரூ.1000 கட்டணம் செலுத்தி 10-2-2017-ந் தேதிக்குள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். நகல் விண்ணப்பம் 17-2-2017-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் அனுப்ப வேண்டும்.

பி.சி.பி.எல்: பிரமபுத்ரா கிராக்கர் அண்ட் பாலிமர் லிமிடெட் (பி.சி.பி.எல்.) எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் டெக்னீசியன் மற்றும் கிராஜூவேட் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 39 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். என்ஜினீயரிங்/டெக்னாலஜி பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விரிவான விவரங்களை www.bcplonline.co.in என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31-1-2017-ந் தேதியாகும்.

Next Story