ராமாபுரம் விநாயகர் கோவில் வளாகத்தில் தடையை மீறி எருதாட்டம்; 12 கிராம இளைஞர்கள் பங்கேற்பு


ராமாபுரம் விநாயகர் கோவில் வளாகத்தில்  தடையை மீறி எருதாட்டம்; 12 கிராம இளைஞர்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 16 Jan 2017 10:12 PM IST)
t-max-icont-min-icon

காரிமங்கலம் அடுத்த ராமாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது.

காரிமங்கலம்,

காரிமங்கலம் அடுத்த ராமாபுரத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் விழா நடைபெற்றது. இதை£ட்டி அங்குள்ள விநாயகர் கோவில் திடலுக்கு மொட்டலூர், ராமாபுரம், பையம்பட்டியானூர், எச்சனஅள்ளி, சின்ன மிட்டஅள்ளி, கெரகோடஅள்ளி, மேல்கொள்ளுப்பட்டி, கீழ்கொள்ளுப்பட்டி, காட்டூர், ஈச்சங்காட்டூர் உள்ளிட்ட 12 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மாடுகளை கோவில் வளாகத்திற்கு பிடித்து வந்தனர். பின்னர் மாடுகளில் கயிறு கட்டி எருதாட்டம் நடைபெற்றது. இதில் மாடுகள் சீறி பாய்ந்து பொதுமக்கள் கூட்டத்தை நோக்கி சென்றன. இதில் 12 கிராமங்களை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் பங்கேற்று கயிறை பிடித்தப்படி மாடுகளை விரட்டி கொண்டு கோவிலை சுற்றி வந்தனர். இந்த எருதாட்டத்தை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். ராமபுரத்தில் தடையை மீறி எருதாட்டம் நடைபெற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story