தூக்கில் வாலிபர் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை
ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி நினைவு வளைவு உள்ளது.
ஓசூர்,
ஓசூரில் கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தொரப்பள்ளி நினைவு வளைவு உள்ளது. இந்த பகுதியில் உள்ள ஒரு ஓட்டலின் அருகில் உள்ள ஒரு கட்டிடத்தின் விட்டத்தில் நேற்று மாலை வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். அவருக்கு வயது சுமார் 23 இருக்கும். வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் அட்கோ போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story