நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் சரிவு 349 காசுகளாக நிர்ணயம்
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 15 காசுகள் சரிவடைந்து 349 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 364 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை கொள்முதல் விலையை அதிரடியாக 15 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 349 காசுகளாக சரிவடைந்து உள்ளது.
பிற மண்டலங்களில் முட்டை விலை (காசுகளில்) வருமாறு:– சென்னை–370, ஐதராபாத்–325, விஜயவாடா, தனுகு–337, பார்வாலா–342, மும்பை–388, மைசூரு–366, பெங்களூரு–365, கொல்கத்தா–384, டெல்லி–350.
கறிக்கோழி விலை உயர்வுகறிக்கோழி விலை கிலோ ரூ.61–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு அதிரடியாக ரூ.11 உயர்த்த முடிவு செய்தனர். அதன்படி கறிக்கோழி விலை கிலோ ரூ.72 ஆக உயர்ந்து உள்ளது.
இதேபோல முட்டைக்கோழி கிலோ ரூ.52–க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டைக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.5 உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டைக்கோழி விலை கிலோ ரூ.57 ஆக உயர்ந்து உள்ளது.
காரணம் என்ன?பிற மண்டலங்களில் முட்டை விலை சரிவடைந்து வருவதால் அதற்கு தகுந்தாற்போல் நாமக்கல் மண்டலத்திலும் முட்டை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.