திருவாமாத்தூர் அய்யப்பன் கோவிலில் மகரஜோதி தரிசனம்
திருவாமாத்தூர் அய்யப்பன் கோவிலில் மகர ஜோதி தரிசனம் நடைபெற்றது
விழுப்புரம்,
.மகரஜோதி
விழுப்புரம் அருகே திருவாமாத்தூரில் பிரசித்தி பெற்ற வடசபரி அய்யப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மகரஜோதி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டு மகரஜோதி விழா கடந்த நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மகரஜோதி தரிசனம் நடை பெற்றது. இதையொட்டி காலையில் அய்யப்ப சாமிக்கு பால், தயிர், நெய், வெண்ணெய், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னர் கோவிலில் மகரஜோதி ஏற்றப்பட்டது. இதில் திருவாமாத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story