தேனி அருகே வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் மோதல்–கல்வீச்சு போலீஸ் குவிப்பு


தேனி அருகே வீரபாண்டியில் நடந்த பொங்கல் விழாவில் மோதல்–கல்வீச்சு போலீஸ் குவிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 3:30 AM IST (Updated: 17 Jan 2017 12:41 AM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே வீரபாண்டியில் இருந்து வயல்பட்டி செல்லும் சாலையில் நேற்று மாலை சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர்.

தேனி

தேனி அருகே வீரபாண்டியில் இருந்து வயல்பட்டி செல்லும் சாலையில் நேற்று மாலை சிலர் மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை மறித்து அவர்கள் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

 இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள், தகராறு குறித்து வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர்களிடம் தெரிவித்துள்ளனர். அப்போது அவர்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினர் சம்பவ இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அப்போது மது போதையில் தகராறில் ஈடுபட்டவர்களின் தரப்பை சேர்ந்தவர்களில் சிலர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதே பகுதியில் விளையாட்டு போட்டிகளை நடத்திக்கொண்டிருப்பது தெரியவந்தது.

 இதையடுத்து போட்டி நடந்த இடத்திற்கு சென்ற அவர்கள் அங்கிருந்தவர்கள் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்கு இடையேயும் மோதல் உருவானது.

 இது குறித்து தகவல் அறிந்ததும் வீரபாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரனும் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார். பின்னர், இருதரப்பினரையும் அழைத்து போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

 இந்த மோதலில் சிலர் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் பாதுகாப்பு பணிக்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.


Next Story