பாரம்பரிய விளையாட்டுகளுடன் பொங்கல் விழா கொண்டாட்டம்
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
ராஜபாளையம்,
விளையாட்டு விழா
ராஜபாளையம் ராம்கோ குரூப் பஞ்சாலை நிறுவனங்களின் சார்பில் பொங்கல் விளையாட்டு விழா ராஜபாளையம் மில்ஸ் ஊழியர்கள் மனமகிழ் மன்ற விளையாட்டு மைதானத்தில் ராம்கோ குரூப் சேர்மன் ராமசுப்பிரமணியராஜா மற்றும் துணை சேர்மன் வெங்கட்ராமராஜா தலைமையில் நடைபெற்றது. விழாவில் 6 நிறுவனங்களிலும் ஊதிய இழப்பின்றி பணியாற்றிய 1,120 தொழிலாளர்களுக்கும், 295 நாட்களுக்கும் மேலாக ஊதியம் ஈட்டிய 1,050 தொழிலாளர்களுக்கும், ஆலையின் அனைத்துப் பிரிவுகளிலும் சிறப்பாக பணியாற்றிய 163 தொழிலாளர்களுக்கும், 35 வருடம், 25 வருடம், 20 வருடம் மற்றும் 15 வருடம் வேலை செய்தவர்களுக்கும் ஊதிய இழப்பு இல்லாமல் அதிக வருடங்கள் பணிபுரிந்ததற்காக பரிசு வழங்கப்பட்டது. குழு விளையாட்டு மற்றும் தடகளப் போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
ராம்கோ குரூப் நூற்பாலைகளின் முதுநிலை பொது மேலாளர் நாகராஜன் வரவேற்றுப் பேசினார். தொழிற்சங்கத் தலைவர்கள் வாழ்த்தி பேசினர். விழாவில் ராம்கோ சேர்மன் ராமசுப்பிரமணியராஜா பேசுகையில், இப்பொழுதுள்ள நெருக்கடியான நிலைகளை சமாளிக்க தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களும் தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்் என கூறினார்.
மேலும் ராம்கோ குரூப் பஞ்சாலைகளுக்கு இடையேயான உற்பத்தித் திறன் அதிகரிப்பு, சுற்றுப்புறத் தூய்மை, செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றின் அடிப்படையில் எக்ஸெல் அவார்டு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. செண்பககுமரன் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை ராஜபாளையம் மில்லின் துணை தலைவர் ராஜு மற்றும் மனிதவளத்துறை அலுவலர்கள் செய்திருந்தனர்.
விடுதலைச்சிறுத்தைகள்
வெம்பக்கோட்டை வெற்றிலையூரணியில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த பொங்கல் விழாவுக்கு சாத்தூர் தொகுதி துணை செயலாளர் பால்பாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயசீலன் முன்னிலை வகித்தார். கனியமுதன், திருக்குமரன், இன்னாசிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெற்றிலையூரணியில் சீனிவாசபெருமாள் கோவில் வளாகத்தில் கோலப்போட்டி நடைபெற்றது. கோவில்தர்மகர்த்தா முருகன், விக்னேஷ், கோவிந்தராஜ், பிரபு, பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன் பட்டி எஸ்.எம்.எஸ்.பாலிடெக்னிக் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் கல்லூரி சேர்மன்முத்துச்செல்வி, தாளாளர் முத்துவாழி உள்பட பலர் கலந்து கொண்டனர்
சிவகாசி அருகே உள்ள பேர்நாயக்கர்பட்டி ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் பொங்கல்விழா பள்ளி தலைவர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையில் நடந்தது. முதல்வர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். தாளாளர் ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார். தொழில் அதிபர் பிரகாசம் மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கினார்.
தாயில்பட்டி கோட்டையூரில் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன. பெண்களுக்கு கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை நேதாஜி, தேவர் பேரவையினர் செய்திருந்தனர்.
பாரம்பரிய விளையாட்டு
சிவகாசி எஸ்.எப்.ஆர். மகளிர் கல்லூரியில் நடந்த பொங்கல் விழாவுக்கு கல்லூரி செயலாளர் அருணா அசோக் மற்றும் கல்லூரி உறுப்பினர் விஜயலட்சுமி சிரஞ்சீவிரத்தினம் ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழர்களின் விளையாட்டுகளை மீட்டெடுக்கும் விதமாக பல்லாங்குழி, தட்டாங்கல், கபடி, நொண்டியடித்தல், உறியடி போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 400 மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. தமிழர்களின் ஆடை அணிகலன்களுடன் மாணவிகளின் அணிவகுப்பும் நடைபெற்றது. மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
இதேபோல் சிவகாசியில் இந்திய தேசிய லீக் மாநில தலைவர் பஷீர் அகமது தலைமையில் உறுப்பினர்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடினர். கொண்டாட்டத்தில் மாடுகளுக்கு தீவனம் அளித்தனர். தொழிலாளர்களுக்கு இலவச வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினர். விழாவில் மாவட்ட பொறுப்பாளர் செய்யது ஜஹாங்கீர் மற்றும் சிவகாசி நகர பொறுப்பாளர் முத்துவிலாசா உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story