ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நெய்வேலியில், மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கக்கோரி நெய்வேலியில் மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி,
பேரணி
பருவமழை பொய்த்து போனதால் தமிழகம் முழுவதும் விவசாயிகள் பலர் இறந்துள்ளனர். இவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நெய்வேலியில் நேற்று பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேரணி மற்றும் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனுமதி மறுப்பு
என்.எல்.சி. மத்திய பஸ் நிலைய மைதானம் முன்பு நேற்று மாலை 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று திரண்டனர். பின்னர், அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையத்தை சென்றடைந்தனர். ஊர்வலத்தின் போது மாணவர்கள், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்க வேண்டும், தண்ணீர் இன்றி பயிர்கள் கருகியதால் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனை தொடர்ந்து, பஸ் நிலையம் முன்பு மாணவர்கள் ஒன்று கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்கள் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த நெய்வேலி டவுன்ஷிப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மனிதசங்கிலி நடத்த அனுமதி கிடையாது என்று கூறினர். இதைகேட்ட மாணவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் உரிய அனுமதியின்றி போராட்டம், பேரணி நடத்தக்கூடாது என்று கூறி சமாதானப்படுத்தினர். இதையடுத்து மனிதசங்கிலி போராட்டத்தை முடித்துக் கொண்ட மாணவர்கள், வறட்சியால் உயிரிழந்த விவசாயிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story