தாராபுரம் அருகே பறையடிக்கும் சத்தம் கேட்டு மிரண்டு ஓடிய காளைகள்


தாராபுரம் அருகே பறையடிக்கும் சத்தம் கேட்டு மிரண்டு ஓடிய காளைகள்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:30 AM IST (Updated: 17 Jan 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

தாராபுரம் அருகே பறையடிக்கும் சத்தம் கேட்டு காளைகள் மிரண்டு ஓடி கூட்டத்திற்குள் புகுந்தது.

மஞ்சு விரட்டு

தாராபுரத்தை அடுத்த நஞ்சியம்பாளையத்தில் மஞ்சுவிரட்டு நடத்திக் கொள்வதற்கு போலீசாரிடம் பொதுமக்கள் அனுமதி கேட்டனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை. இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்தநிலையில் ஓரிரு காளைகளை அப்பகுதி இளைஞர்கள் அங்குள்ள கோவிலுக்கு அழைத்துவந்தனர்.

இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த காளைகளை தடுத்து நிறுத்திய போலீ சார் “மஞ்சுவிரட்டு நடத்தினால் கைது செய்ய வேண் டிய சூழ்நிலை ஏற்படும்” என எச்சரிக்கை செய்தனர். அதைத்தொடர்ந்து பொது மக்கள் மஞ்சுவிரட்டு நடத்துவதையும் கைவிட் டனர்.

மிரண்டு ஓடிய காளைகள்

அதன்பிறகு போலீஸ் அனுமதியுடன் இரண்டு காளைகளோடு ஜல்லித்தேர் ஓட்டும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதையடுத்து காளைகளை ஒவ்வொன்றாக அழைத்துவந்து கோவில் முன்பு நிறுத்தி வைத்து அதற்கு பூஜைகள் செய்யப்பட்டன.

நஞ்சியம்பாளையத்தில் நடந்த பூஜையின்போது பறையடிக்கும் சத்தம் கேட்டு காளைகள் மிரண்டு துள்ளிக்குதித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்திற்குள் புகுந்துவிட்டது.

இதனால் கூட்டத்தில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த போலீசார் காளைகளை கோவிலுக்கு அழைத்துவருவதை தடுத்தனர். பறையடிப்பதை நிறுத்தினால் மட்டுமே காளைகளை கோவிலுக்கு கொண்டுவர அனுமதிப்போம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை பொது மக்கள் ஏற்றுக்கொண்டனர். பிறகு காளைகளை கோவிலுக்கு கொண்டுவந்து பூஜை நடத்தப்பட்டது. 

Next Story