உடுமலை அருகே காளைகளை கோவில்களுக்கு அழைத்து வந்து பூஜை


உடுமலை அருகே காளைகளை கோவில்களுக்கு அழைத்து வந்து பூஜை
x
தினத்தந்தி 17 Jan 2017 2:45 AM IST (Updated: 17 Jan 2017 1:33 AM IST)
t-max-icont-min-icon

உடுமலையை அடுத்துள்ள சுண்டக்காம்பாளையத்தில் மஞ்சுவிரட்டுதல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உடுமலை

உடுமலையை அடுத்துள்ள சுண்டக்காம்பாளையத்தில் மஞ்சுவிரட்டுதல் நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
 
 இந்த நிலையில் நேற்றுகாலை போலீசார் சுண்டக்காம்பாளையத்திற்கு சென்று கோர்ட்டு தடை உத்தரவு உள்ளதால்மஞ்சு விரட்டுதல் நிகழ்ச்சியை நடத்தக்கூடாது என்று தெரிவித்தனர். அதனால் அந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதே சமயம் காளை மற்றும் கன்றுகுட்டிகளுக்கு மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. அந்த கிராமத்தில் உள்ள ஸ்ரீகருவண்ணராயர் கோவில் முன்பு காலை மற்றும் கன்று குட்டிகளுக்கு பூஜை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அங்கும் காளைகளுக்கும், கன்றுகளுக்கும் பூஜை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளின் போது தொன்றுதொட்டு வரும் தமிழர்களின் வீர விளையாட்டை தடை செய்யக்கூடாது என்று கோரிய பதாகைகளை கையில் பிடித்தவாறு சென்றனர். 

Next Story