டெல்லியில் நடந்த சரக்கு சேவை வரி கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு


டெல்லியில் நடந்த சரக்கு சேவை வரி கூட்டத்தில் நாராயணசாமி பங்கேற்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 3:45 AM IST (Updated: 17 Jan 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் நடந்த சரக்கு சேவை வரி கூட்டத்தில் முதல்–அமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

டெல்லி சென்றார்

சரக்கு சேவை வரியை அமல்படுத்துவது தொடர்பாக மாநில நிதி அமைச்சர்கள் கூட்டம் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த கூட்டத்தில் இதுவரை ஒருமித்த முடிவுகள் எதுவும் எடுக்கப்படவில்லை. இதனால் கூட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்றும் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாலையில் புதுச்சேரியிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி சென்றார்.

பங்கேற்பு

டெல்லியில் நடந்த சரக்கு சேவை வரி தொடர்பான கூட்டத்திலும் அவர் கலந்துகொண்டார். கூட்டத்தில் அவர் புதுவை மாநிலம் தொடர்பான வி‌ஷயங்களை பதிவு செய்தார். கூட்டம் முடிந்ததும் அவர் புதுச்சேரிக்கு புறப்பட்டு வந்தார்.


Next Story