போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் இடமாற்றம்
புதுவை காவல்துறையில் போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் பெரும்பாலும் துய்மா வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இங்கு கடுமையான இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் கோரிமேட்டில் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டிடத்தில் டி.ஐ.ஜி
புதுச்சேரி,
புதுவை காவல்துறையில் போலீஸ் அதிகாரிகளின் அலுவலகங்கள் பெரும்பாலும் துய்மா வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ளன. இங்கு கடுமையான இடப்பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில் கோரிமேட்டில் புதிய நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டிடத்தில் டி.ஐ.ஜி. அலுவலகம், ஐ.ஆர்.பி. பட்டாலியன் கமாண்டன்ட் அலுவலகம் போன்றவை செயல்பட உள்ளன. அதேபோல் ஊர்க்காவல்படை, வயர்லெஸ், நவீன கட்டுப்பாட்டு அறை போன்றவையும் இங்குதான் இயங்க உள்ளன. இதற்கான உத்தரவை காவல்துறை தலைமையக போலீஸ் சூப்பிரண்டு ஐ.ஆர்.சி. மோகன் வெளியிட்டுள்ளார்.
Next Story