எம்.ஜி.ஆரின் புகழை தழைத்தோங்கச் செய்யும் வகையில் புதுவை அரசு வருங்காலங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முதல்–அமைச்சர் உறுதி


எம்.ஜி.ஆரின் புகழை தழைத்தோங்கச் செய்யும் வகையில் புதுவை அரசு வருங்காலங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முதல்–அமைச்சர் உறுதி
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 17 Jan 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

எம்.ஜி.ஆரின் புகழை தழைத்தோங்கச் செய்யும் வகையில் புதுவை அரசு வருங்காலங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி கூறினார். இது தொடர்பாக புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்

புதுச்சேரி,

எம்.ஜி.ஆரின் புகழை தழைத்தோங்கச் செய்யும் வகையில் புதுவை அரசு வருங்காலங்களில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்று முதல்–அமைச்சர் நாராயணசாமி உறுதி கூறினார்.

இது தொடர்பாக புதுச்சேரி முதல்–அமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:–

எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா

தமிழக முன்னாள் முதல்–அமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆரின் 100–வது பிறந்த நாள் விழா தமிழ் கூறும் நல்லுலகில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. ஏழை எளிய மக்களின் வாழ்வு வளம்பெற வேண்டும் என்று திரைப்படங்களில் தான் ஏற்ற கதாபாத்திரங்கள் மூலம் மட்டுமல்லாமல் தன் தனி வாழ்விலும், பொது வாழ்விலும் அவர்களது வாழ்க்கை மேம்பாடு அடைவதையே லட்சியமாகக் கொண்டு பாடுபட்டவர்.

திரையுலகம், அரசியல் களம் என இரண்டிலும் தன்னிகரற்ற தனி முத்திரையை பதித்து மக்கள் மனதில் நிலையாக நிற்பவர் எம்.ஜி.ஆர். ஒழுக்கம், நேர்மை, நியாயம், அன்பு, தியாகம் என்று நல்ல கருத்துக்களை தனது திரைப்படங்களின் வாயிலாக எடுத்துரைத்து மக்களின் நன்மதிப்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பொதுவாழ்விலும் அவற்றைக் கடைபிடித்த நேர்மையாளர். புரட்சிகரமான பாடல்கள் மற்றும் வசனங்களின் வாயிலாக மக்களின் உணர்வுகளைத் தொட்டவர்.

சிறப்பான நடவடிக்கைகள்

அரசியல் வாழ்விலும் தனது முன்னோடிகளை மறவாமல் அவர்களது எண்ணங்களை ஈடேற்றும் வகையில் முதல்–அமைச்சரான பிறகு பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த பெருமைக்கு உரியவர். ஏழை மக்களின் பாட்டாளியாகவும், கூட்டாளியாகவும் தன் வாழ்வில் இறுதிநாள் வரை வாழ்ந்த அவரது நினைவும், புகழும் என்றும் நினைத்துப் போற்றத்தக்கது.

புதுச்சேரி அரசு மறைந்த தமிழக முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆர். புகழுக்கும், பெருமைக்கும் மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஆண்டுதோறும் அவரது பிறந்த நாளையும், நினைவு நாளையும் வெகு சிறப்பாக போற்றி வருகிறது. அவரது புகழை தழைத்தோங்கச் செய்யும் வகையில் எமது அரசு வருங்காலங்களில் சிறப்பான நடவடிக்கைகளை உறுதியாக மேற்கொள்ளும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story