தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்


தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:12 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி விமான நிலையத்துக்கு ‘தமிழர் தந்தை‘ சி.பா.ஆதித்தனார் பெயரை சூட்ட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவில்பட்டி,

ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டி பசுவந்தனை ரோடு சிவந்திபட்டி காமராஜ் திருமண மண்டபத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. மாவட்ட தலைவர் வினோத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட அவை தலைவர் மைக்கேல் அமலதாஸ், மாவட்ட அமைப்பாளர்கள் இளங்கோ, முனியசாமி, நாடார் பேரவை மாவட்ட செயலாளர் தங்க மாரியப்பன், பொருளாளர் பெரியசாமி பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கருப்பசாமி வரவேற்று பேசினார்.

மாநில தலைவர் என்.ஆர்.தனபாலன் பேசினார். மாநில துணை தலைவர்கள் மோகன், குருசாமி, மாநில செயலாளர் பாலாஜி, தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், அய்யாத்துரை, மாவட்ட இளைஞர் அணி தலைவர் கோயில்மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மதிய உணவு திட்டத்தை...

கோவில்பட்டியில் புதிதாக கட்டப்பட்ட அண்ணா பஸ் நிலையத்தை உடனே திறக்க வேண்டும், 2-வது குடிநீர் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும், ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கி, பீட்டா அமைப்பை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும், ஜல்லிக்கட்டு நடத்தியவர்கள் மீது போலீசார் பதிவு செய்த வழக்குகளை திரும்ப பெற வேண்டும், தமிழகத்தில் முதன் முதலில் பெருந்தலைவர் காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை இந்தியா முழுவதும் விரிவுபடுத்தி, அந்த திட்டத்துக்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்.

‘தமிழர் தந்தை’ பெயரை...

தமிழுக்கும், தமிழர்களுக்கும் அரும் பணியாற்றிய ‘தமிழர் தந்தை‘ சி.பா.ஆதித்தனாரின் பெயரை தூத்துக்குடி விமான நிலையத்துக்கு சூட்ட வேண்டும், தமிழகத்தில் மூடி கிடக்கும் காமராஜர் சிலைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நகர தலைவர் அந்தோணிராஜ் நன்றி கூறினார்.

Next Story