நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு டவுன் பஸ் வசதி
நெல்லை சந்திப்பு ரெயில்நிலையத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
நெல்லை,
அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து சந்திப்பு பஸ் நிலையத்திற்கு நடந்தோ அல்லது ஆட்டோவிலோ செல்லும் நிலை இருந்து வருகிறது. பஸ் நிலையத்திற்கு வருகிற பயணிகளிடம் சில ஆட்டோ டிரைவர்கள் அதிக கட்டணம் வசூல் செய்ததாக புகார்கள் எழுந்தன.
இதைதொடர்ந்து நெல்லை சந்திப்பு பஸ் நிலையத்திற்கு வருகிற அரசு பஸ்கள், அங்கிருந்து ரெயில் நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிச் செல்லவேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதைத்தொடர்ந்து பாளையங்கோட்டை ஐகிரவுண்டில் இருந்து சந்திப்பு பஸ்நிலையத்திற்கு வருகிற அரசு டவுன் பஸ்கள் அங்கிருந்து நீட்டிப்பு செய்து ரெயில்நிலையம் வரை சென்று அங்குள்ள காமராஜர் சிலை முன்பு நின்று பயணிகளை ஏற்றி வர உத்தரவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு பஸ்கள் சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு சென்று பயணிகளை ஏற்றிச் செல்கின்றன.
டவுன் பஸ்கள் ரெயில் நிலையம் வரை வந்து செல்வது தங்களுக்கு வசதியாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர். மதுரை, திருச்சி, சென்னை உள்ளிட்ட ரெயில் நிலையங்களின் வாசலில் இருந்து அனைத்து டவுன் பஸ்களும் இயக்கப்படுவது போல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தின் முன்பிருந்து அனைத்து டவுன் பஸ்களையும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story