திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்


திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
x
தினத்தந்தி 17 Jan 2017 4:15 AM IST (Updated: 17 Jan 2017 2:13 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் காலை முதல் பக்தர்கள் குவிந்தனர்.

திருவாரூர்,

தொடர்ந்து கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் கோவில் பிரகாரத்தில் பக்தர்கள் தங்களது குடும்பத்தினருடன் அமர்ந்து வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த உணவுகளை மகிழ்ச்சியுடன் சாப்பிட்டனர். காணும் பொங்கலையொட்டி திருவாரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story