நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 ஆயிரம் கொள்ளை
திருச்சி தில்லைநகரில் உள்ள நகைக்கடை அதிபர் வீட்டில் ரூ.8 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருச்சி,
நகைக்கடை அதிபர் வீட்டில் கொள்ளை
திருச்சி தில்லைநகர் 3-வது கிராசை சேர்ந்தவர் அபிஷேக். இவர் திருச்சி என்.எஸ்.பி.ரோட்டில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு தில்லை நகர் 1-வது கிராசிலும் ஒரு வீடு உள்ளது. நேற்று காலை அவர் 1-வது கிராசில் உள்ள வீட்டுக்கு சென்றார். அப்போது அவர் வீட்டின் பின்புறம் சென்று பார்த்த போது அங்குள்ள இரும்பு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மேலும் குளியலறையின் ஜன்னல் கண்ணாடிகள் கழற்றப்பட்டிருந்தன. மேலும் இரும்பிலான பாதுகாப்பு பெட்டகத்தை (லாக்கரை) உடைத்து, அதிலிருந்த ரூ.8 ஆயிரத்தை யாரோ மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிய வந்தது. இது குறித்து தில்லைநகர் போலீசில் அபிஷேக் புகார் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்தை போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அபிஷேக்கின் நகைக்கடையில் பல கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை போனது. இந்த கொள்ளையில் கடை ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பது பின்னர் தெரியவந்தது. தற்போது நடந்த இந்த கொள்ளையிலும் ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாமோ என்ற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்கடை அதிபர் வீட்டில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story