மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
தண்ணீர்பந்தலில் உள்ள மதுபான கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
க.பரமத்தி,
சாலை மறியல்
க.பரமத்தி அருகே உள்ள விஸ்வநாதபுரியை சேர்ந்தவர் நவீன்(வயது 25). இவர் குடிபோதையில் தண்ணீர்பந்தலில் இருந்து விஸ்வநாதபுரியை நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் ஆகியோர் நவீனை நிறுத்தி, அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்குப்பதிவு செய்தனர். இதனை அறிந்த விஸ்வநாதபுரியை சேர்ந்த பொதுமக்கள் இதை கண்டித்தும், தண்ணீர்பந்தலில் உள்ள மதுபான கடையை அகற்ற கோரியும் தண்ணீர்பந்தலில் கரூர்- கோவை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கரூர்- கோவை சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story