தோகைமலை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு
தோகைமலை அருகே தடையை மீறி ஜல்லிக்கட்டு நடத்தினர்.
தோகைமலை,
ஜல்லிக்கட்டு
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆர்.டி.மலையில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். கரூர் மாவட்டத்தில் ஆர்.டி.மலையில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நூற்றுக்கணக்கான ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். ஆனால் ஜல்லிக்கட்டிற்கு தடைவிதிக்கப்பட்டதால் அப்பகுதி இளைஞர்கள் உள்பட பொதுமக்கள் சோகத்தில் இருந்து வரு கின்றனர்.
பரபரப்பு
இந்நிலையில் நேற்று மாலை வழக்கம்போல் கோவில் காளை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை விராச்சிலேஸ்வரர் மற்றும் பெரியநாயகியம்மன் மலைக்கோவிலை சுற்றி அழைத்துவந்து விநாயகர் கோவில் முன்பாக வழிபட்டனர். பின்னர் காளைகளை பிடாரி அம்மன் கோவிலுக்கு அழைத்து சென்று புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கோவில் காளை மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளை கயிற்றுடன் ஓடவிட்டனர். ஓடிய காளைகளை மாடுபிடி வீரர்கள் பிடித்து அடக்கினர். தோகைமலை போலீசார் பாதுகாப்பிற்காக நின்றபோதும் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கூடியதால் திடீர் என்று, ஜல்லிக்கட்டு காளைகளை ஓடவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கோஷங்கள்
5 காளைகள் மட்டுமே ஓடவிட்டாலும் ஜல்லிக்கட்டு நடந்ததாக உற்சாகத்துடன் இளைஞர்கள் சென்றனர். மேலும் இப்பகுதி இளைஞர்கள் ஜல்லிக்கட்டை தடைசெய்ய காரணமாக இருக்கும் பீட்டா அமைப்பிற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து தேவராட்டம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story