ஜல்லிக்கட்டு காளைகளை திடீரென்று அவிழ்த்து விட்டதால் பரபரப்பு


ஜல்லிக்கட்டு காளைகளை திடீரென்று அவிழ்த்து விட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 4:30 AM IST (Updated: 17 Jan 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

கீழாநிலைக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு காளைகளை திடீரென்று அவிழ்த்து விட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.மேலும் இளைஞர்களை போலீசார் விரட்டியடித்தனர்.

அரிமளம்,

திடீரென்று அவிழ்த்து விட்டனர்

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கீழாநிலைக்கோட்டையை அடுத்துள்ளது பழைய மாங்குடி சாத்தையனார் கோவில். இக்கோவில் அருகில் உள்ள கண்மாயில் அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஆங்காங்கே கூடி இருந்தனர். இந்நிலையில் தடையை மீறி திடீரென்று ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டனர். அப்போது மாடுபிடி வீரர்கள் காளைகளை விரட்டிச் சென்று அதன் திமில்களை பிடித்து அடக்க முயன்றனர்.

பரபரப்பு

ஆனால் காளைகள் யாரிடமும் பிடிபடாமல் பாய்ந்து சென்றது. இதனை கண்ட போலீசார் மாடுகளை கொண்டு வந்த இளைஞர்களை விரட்டிச் சென்றனர். இதில் இளைஞர்கள் போலீசாரிடம் சிக்காமல் தப்பிச் சென்றனர். பின்னர் அங்கிருந்த கூட்டத்தினரை விரட்டியடித்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story