கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு


கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு
x
தினத்தந்தி 17 Jan 2017 4:00 AM IST (Updated: 17 Jan 2017 2:16 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம் தென்னூர் அருட்தந்தை சுலூஸ் நினைவு கால்பந்து போட்டி வரதராஜன்பேட்டை தனியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

வரதராஜன்பேட்டை,

போட்டியை வரதராஜன்பேட்டை பங்குதந்தைகள் வின்சென்ட், எடிசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் சென்னை, ஏலகிரி, மதுரை, பண்ருட்டி, இலையூர், ஜெயங்கொண்டம், கும்பகோணம், அரியலூர், வரதராஜன்பேட்டை, கடலூர், திருச்சி உள்பட 15-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கால்பந்து வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை மதுரை தொன்போஸ்கோ அணியினரும், 2-வது பரிசை ஏலகிரி அணியினரும், 3-வது பரிசை ஜெயங்கொண்டம் அணியினரும், 4-வது பரிசை வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ அணியினரும் பெற்றனர். வெற்றி பெற்றவர் களுக்கு வரதராஜன்பேட்டை தொன்போஸ்கோ மேல் நிலைப்பள்ளி தாளாளர் தாமஸ்லூயிஸ், தலைமை ஆசிரியர் சகாயராஜ் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை வரதராஜன்பேட்டை டி.பி.ஒய்.சி. அமைப்பை சேர்ந்த எட்வின் லூயிஸ், போஸ்கோ மற்றும் தொன்போஸ்கோ இளைஞர் அமைப்பு செயலாளர் சகாயராஜ், தலைவர் பிரவீன் ஆகியோர் செய்திருந்தனர்.

Next Story