பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது
பருவமழை பொய்த்து போனதால் முக்கடல் அணை வறண்டது. இதனால் கோடைக்காலத்துக்கு முன்பே நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
நாகர்கோவில்,
பெருஞ்சாணி, பேச்சிப்பாறை அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்தது.
15 நாட்களுக்கு ஒருமுறை...
நாகர்கோவில் நகர மக்கள் மற்றும் வழியோர கிராம மக்களின் குடிநீர் ஆதாரமாக முக்கடல் அணை இருந்து வருகிறது. தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை ஆகிய இரு பருவ மழைகளும் பொய்த்து போனதால் இந்த அணை வறண்டு போனதோடு, அணையின் நீர்மட்டம் மைனஸ் அளவில் இருந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் 8 அடியாக இருந்தது.
இதனால் தற்போது நாகர்கோவில் நகர மக்களுக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து பாசனத்துக்காக திறந்து விடப்படும் தண்ணீரை பம்பிங் செய்து, சுத்திகரித்து குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகம் முன்புபோல் 5 நாள் இடைவெளியில் குடி தண்ணீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது 15 நாட்களுக்கு ஒருமுறைதான் நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
வறட்சியால் பாதிப்பு
இத்தகைய சூழ்நிலையில் மழை இல்லாததால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றர்–1, சிற்றார்–2, பொய்கை, மாம்பழத்துறையாறு போன்ற அணைகளும் வறட்சியின் பிடியில் இருந்து தப்பவில்லை.
நேற்றைய நிலவரப்படி 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 8.30 அடியாகவும், 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 19.80 அடியாகவும், தலா 18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றார்–1 அணை நீர்மட்டம் 4.69 அடியாகவும், சிற்றார்–2 அணை நீர்மட்டம் 4.78 அடியாகவும், 42.65 அடி கொள்ளளவு கொண்ட பொய்கை அணையின் நீர்மட்டம் 8.20 அடியாகவும், 54 அடி கொள்ளளவு கொண்ட மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 34.45 அடியாகவும் உள்ளன.
மழை பொய்த்ததால், அணைகளில் இருந்து சுழற்சி அடிப்படையில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் உள்ள குளங்களில் இருந்து அருகாமையில் உள்ள நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. தண்ணீர் கிடைக்காத நெல் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகி வருகின்றன. இதேபோல் வாழை மற்றும் தென்னை மரங்கள் வாடி வருகின்றன. இதனால் குமரி மாவட்டத்தில் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள், வாழை மற்றும் தென்னைப்பயிர்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.
ஒரே தீர்வு
இதனால் அறுவடைக்கு தயாராக இருக்கும் நெற்பயிர்கள், அணை தண்ணீரை நம்பியிருக்கும் வாழை, தென்னைப் பயிர்களுக்கு அணைகளில் தற்போது இருக்கும் தண்ணீரே போதுமானதாக இல்லாத நிலையில், நாகர்கோவில் நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க நாகர்கோவில் நகராட்சிக்கு இருக்கும் ஒரே தீர்வு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மட்டுமாக இருந்து வருகிறது. நகராட்சி நிர்வாகம் அணைகளில் போதிய தண்ணீர் இல்லாததை கருத்தில் கொண்டு நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்க பெரிய அளவிலான கிணறுகள் ஏதும் உள்ளதா? என்றும், ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து குடிநீர் சப்ளை செய்யலாமா? என்றும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் கிணறுகளைப் பார்வையிட்டதில் பெரிய கிணறுகள் எங்கும் இல்லை. இருக்கிற கிணறுகளில் உள்ள தண்ணீரை ஒரு தெருவுக்குகூட வழங்க முடியாத நிலைதான் இருக்கிறது. ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் எடுக்கலாம் என்றாலோ? வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்துள்ளது. அதனால் அதுவும் சாத்தியப்படாத நிலை இருந்து வருகிறது. இதனால் நகராட்சி நிர்வாகத்துக்கு இருக்கும் ஒரே தீர்வு அணைத்தண்ணீராக மட்டுமே இருந்து வருகிறது. அதுவும் அணைகளில் தண்ணீர் இருக்கிற வரை சமாளிக்கலாம். அதன் பிறகு என்ன தீர்வு? என்பதற்கு விடை காண முடியாத கேள்வியாக இருந்து வருகிறது.
குழப்பத்தில் அதிகாரிகள்
அணைகளில் தண்ணீர் இருக்கும் போதே கோடையில் நாகர்கோவில் நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை.
பிப்ரவரி மாதத்துக்குப்பிறகு கடுமையான வெயில் வாட்டி வதைக்க உள்ள நிலையிலும், ஜூன் மாதம் வரையில் ஏற்படப்போகும் குடிநீர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிப்பது? எனத்தெரியாமல் நகராட்சி அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

Next Story