சரத்குமார் உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம்: ஆவடியில் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு


சரத்குமார் உருவபொம்மை எரிப்புக்கு கண்டனம்: ஆவடியில் ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2017 3:15 AM IST (Updated: 17 Jan 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் சரத்குமாரின் உருவ பொம்மையை ரஜினிகாந்த் ரசிகர்கள் எரித்தனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு ஆவடி பஸ் நிலையம் அருகே சமத்துவ மக்கள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் தலைமையில் மாவட்ட

ஆவடி,

திருச்சி, வேலூர் ஆகிய பகுதிகளில் சரத்குமாரின் உருவ பொம்மையை ரஜினிகாந்த் ரசிகர்கள் எரித்தனர். அதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நேற்று மாலை 6 மணிக்கு ஆவடி பஸ் நிலையம் அருகே சமத்துவ மக்கள் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் சந்திரபோஸ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் புகழேந்தி, ஆவடி நகர செயலாளர் விஜய், நகர தலைவர் வேல்ராஜ், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன் உள்பட பலர் ரஜினிகாந்த் உருவபொம்மையை எரித்தனர். போராட்டத்தின்போது ரஜினிகாந்துக்கு எதிராக கண்டன கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் அங்கு வந்த ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் உருவபொம்மை எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 20–க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.


Next Story