நந்தம்பாக்கத்தில் ரஜினி ரசிகர்கள் போராட்டம்


நந்தம்பாக்கத்தில் ரஜினி ரசிகர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 17 Jan 2017 3:00 AM IST (Updated: 17 Jan 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதை கண்டித்து ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சர

ஆலந்தூர்,

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் எதிர்ப்பேன் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியதை கண்டித்து ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த 30–க்கும் மேற்பட்டவர்கள் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையம் எதிரே ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது சரத்குமாரை கண்டித்து கோ‌ஷம் எழுப்பப்பட்டது. தகவல் அறிந்த நந்தம்பாக்கம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story