தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் பலி
தாம்பரம் அருகே கட்சி கொடிக்கம்பம் நட்டபோது, மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் நேற்று உயிரிழந்தார். அ.தி.மு.க. பிரமுகர் முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்
தாம்பரம்
தாம்பரம் அருகே கட்சி கொடிக்கம்பம் நட்டபோது, மின்சாரம் தாக்கி அ.தி.மு.க. பிரமுகர் நேற்று உயிரிழந்தார்.
அ.தி.மு.க. பிரமுகர்முன்னாள் முதல்–அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளிலும் அ.தி.மு.க. கொடிக்கம்பங்களுக்கு ‘பெயிண்ட்’ அடித்து கொடி ஏற்றும் ஏற்பாடுகள் நேற்று நடைபெற்றது.
இதேபோல் தாம்பரம் அருகே சேலையூர் மப்பேடு பகுதியில் உள்ள அ.தி.மு.க. கொடிக்கம்பத்தை நேற்று மதியம் 3 மணிக்கு அ.தி.மு.க. தொண்டர்கள் ‘பெயிண்ட்’ அடித்து சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பணியில் மப்பேடுபுத்தூர் 5–வது தெருவைச் சேர்ந்த செல்வராஜ் (வயது 25) என்பவரும் ஈடுபட்டு இருந்தார். இவர் மப்பேடுபுத்தூர் நெடுங்குன்றம் ஊராட்சியின் அ.தி.மு.க இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை பொருளாளராக பதவி வகித்து வந்தார்.
மின்சாரம் தாக்கி பலிகொடிக்கம்பத்தில் ‘பெயிண்ட்’ அடித்து நட்டபோது அது சாய்ந்ததால் செல்வராஜ் கொடிக்கம்பத்தை நிமிர்த்த முயன்றார். அப்போது கொடிக்கம்பத்தின் முனைப்பகுதி அருகில் சென்ற உயர் அழுத்த மின்கம்பியில் உரசியது. இதில் கொடிக்கம்பத்தை பிடித்துக்கொண்டிருந்த செல்வராஜ் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தார்.
தகவல் அறிந்த சேலையூர் போலீசார், செல்வராஜின் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.