மோட்டார் சைக்கிளில் சென்ற கால் டாக்சி டிரைவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்கள் கைது
ஆவடியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த கால் டாக்சி டிரைவரை வழிமறித்து தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஆவடி,

கால் டாக்சி டிரைவர்
ஆவடி புதுநகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முருகேசன் (வயது 47). கால் டாக்சி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
புது நகர் 5-வது தெருவில் சென்றபோது அங்கு நின்றுகொண்டிருந்த ஆவடி ஆனந்தன் நகர் வரதராஜர் தெருவை சேர்ந்த லட்சுமணன் (28), ஆவடி பெரியார் நகர் அன்னை தெருவை சேர்ந்த ராஜன் (26), ஆவடி ஸ்ரீராம் நகர் பகுதியை சேர்ந்த தினேஷ் (23) ஆகிய 3 பேரும் முருகேசனை அழைத்துள்ளனர்.
3 பேர் கைது
அவர் வர மறுத்ததால் 3 பேரும் முருகேசனை வழி மறித்து கரும்பால் அடித்து காலால் உதைத்துள்ளனர். இதில் படுகாயம் அடைந்த முருகேசன் ஆவடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் இதுகுறித்து ஆவடி போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விமலநாதன் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை லட்சுமணன், ராஜன், தினேஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.

Next Story