சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த அட்டைப்பெட்டியால் பரபரப்பு
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதியில், கார்கள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு அட்டைப்பெட்டி கேட்பாரற்று கிடந்தது.
ஆலந்தூர்,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் உள்நாட்டு முனையம் வருகை பகுதியில், கார்கள் வந்து பயணிகளை ஏற்றிச்செல்லும் பகுதியில் நீண்ட நேரமாக ஒரு அட்டைப்பெட்டி கேட்பாரற்று கிடந்தது. இதில் வெடிகுண்டு ஏதாவது இருக்குமா? என்ற பீதி ஏற்பட்டது. உடனே வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அந்த பகுதி முழுவதும் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது அட்டைப்பெட்டியில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் அந்த அட்டைப்பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் ‘ஸ்ட்ராபெர்ரி’ பழங்கள் இருந்தன. பயணி யாராவது விட்டுச்சென்று இருக்கலாம் என்பதால் விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story