அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
நாமகிரிப்பேட்டை அருகே அ.தி.மு.க.வினர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராசிபுரம்,
அ.தி.மு.க. கொடியேற்று விழா
நாமகிரிப்பேட்டை 10-வது வார்டு சின்ன அரியாக்கவுண்டம்பட்டியில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் கொடியேற்று விழாவுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். இதற்காக அவர்கள் ஜெயலலிதா மற்றும் தீபா உருவப்படத்துடன் பேனர் வைத்து இருந்தனர். இதையறிந்த பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அந்த நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டு அரியாக்கவுண்டம்பட்டியில் நடந்த எம்.ஜி.ஆர். பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இதில் பங்கேற்ற பி.ஆர்.சுந்தரம் எம்.பி.யிடம் சின்ன அரியாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் தாங்கள் ஏற்பாடு செய்த விழாவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் பி.ஆர்.சுந்தரம் எம்.பி. தீபா படத்துடன் பேனர் வைத்திருந்ததால் அவர்களுடைய நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
சாலை மறியல்
இதனால் ஆத்திரம் அடைந்த சின்ன அரியாக் கவுண்டம்பட்டியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நாமகிரிப்பேட்டை-பேளுக்குறிச்சி சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது பற்றி தகவல் அறிந்த நாமகிரிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து அப்பகுதியினர் அ.தி.மு.க. கொடியை ஏற்றிவைத்து எம்.ஜி.ஆர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள். பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story