கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:01 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழாவையொட்டி அவருடைய சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

ஓசூர்,

எம்.ஜி.ஆர். பிறந்தநாள்

தமிழக முதல்-அமைச்சரும், அ.திமு.க. நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நகர அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற விழாவிற்கு அ.தி.மு.க. நகர செயலாளர் நாராயணன் தலைமை தாங்கினார். முன்னாள் நகராட்சி தலைவர் ராமு முன்னிலை வகித்தார்.

விழாவையொட்டி ஓசூர் அண்ணா நகர் மற்றும் பழைய கிருஷ்ணகிரி சாலையில் உள்ள உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், கூட்டுறவு வங்கி தலைவர் நடராஜன், கிருஷ்ணகிரி மாவட்ட பாசறை தலைவர் மாரேகவுடு, மாவட்ட பொருளாளர் நாராயணன், மாவட்ட பிரதிநிதி சிட்டி ஜெகதீசன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைத்தலைவர் அரப்ஜான், முன்னாள் கவுன்சிலர்கள் பி.ஆர்.வாசுதேவன், அசோகா, முரளி, கட்சி பிரமுகர் ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாலை அணிவித்து மரியாதை

இதேபோல், பாகலூரில், ஓசூர் ஒன்றிய துணை செயலாளர் ஜெயராமன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மனோரஞ்சிதம்நாகராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணமுர்த்தி, ஒன்றிய செயலாளர் தேவேந்திரன், மாநில நிலவளவங்கி தலைவர் சாகுல்அமீது, நகர செயலாளர் சிவானந்தம், மாவட்ட அண்ணாதொழிற்சங்க தலைவர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதை முன்னிட்டு 4 ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் வேங்கன், முன்னாள் எம்.ஜி.ஆர்.மன்ற இணைசெயலாளர் கண்ணன், மருத்துவரணி இளையராஜா ஆகியோர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தீபா பேரவையினர்

ஓசூர் ஜூஜூவாடியில், ஜெ.தீபா பேரவை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆஞ்சி தலைமை தாங்கினார். அன்பரசு, சம்பத், அருணாசலம், லோகேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சிறப்பு அழைப்பாளராக, சமூக நீதி உரிமைகள் பாதுகாப்பு கவுன்சில் நிறுவனர் இளவரசன் கலந்து கொண்டு பேசினார். இதேபோல், ஓசூர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, ஜெ. தீபா ஆதரவாளர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். சூளகிரியில், ஜெ.தீபா ஆதரவாளர்கள் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

கெலமங்கலம், ஊத்தங்கரை

கெலமங்கலம் ஒன்றிய அ.திமு.க. சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். இதையொட்டி ராயக்கோட்டை அண்ணாசிலை முன்பு எம்.ஜி.ஆரின் உருவப்படம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் சீனிவாசன், பேரவை மாவட்ட துணைத்தலைவர் பிரகாஷ்குமார், ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகன், எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சந்திரன், ஊராட்சி செயலாளர்கள் புருஷப்பன், சுப்பிரமணி, சாக்கப்பன், கோவிந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் பொன்னுசாமி தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இதில், மாணவ, மாணவிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர் கணசேன் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்துகொண்டனர். காவேரிப்பட்டணத்தில் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் ஒன்றிய செயலாளர் எம்.எஸ்.பிரபாகரன் தலைமையில் கட்சியினர், எம்.ஜி.ஆர். உருவப்படத்துடன் ஊர்வலமாக சென்றனர். பின்னர் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

தேன்கனிக்கோட்டை

இதில், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜமுனா கிருஷ்ணன், நகர செயலாளர்கள் வாசுதேவன், அண்ணாதுரை, மாவட்ட விவசாய அணி செயலாளர் வெங்கட்ராமன், எம்.ஜி.ஆர். மன்ற துணைத்தலைவர் ஆறுமுகம், பொறுப்பாளர் குப்புசாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் நாகேஷ் தலைமை தாங்கினார். இதை முன்னிட்டு பஸ்நிலையத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், மாநில பொதுக்குழு உறுப்பினர் சம்பங்கிராமரெட்டி, முன்னாள் தேன்கனிக்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் ராமன், வீட்டு வசதி வாரியத் தலைவர் ஜெயராமன், கெலமங்கலம் ஒன்றிய அவைத்தலைவர் பழனிச்சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story