திருச்சி மாவட்டத்தில் தடையை மீறி 4 இடங்களில் ஜல்லிக்கட்டு
திருச்சி மாவட்டத்தில் தடையை மீறி 4 இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் சீறிப்பாய்ந்த காளைகளை போட்டி போட்டு இளைஞர்கள் அடக்கினர்.
மணப்பாறை,
தடையை மீறி ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் என்ற சமூக ஆர்வலர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு மீதான தடை நீக்கப்படவில்லை. இதை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் பல இடங்களில் தடையை மீறி மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன.
இந்நிலையில் திருச்சி மாவட்டம் பொத்தமேட்டுப்பட்டி பகுதியில் நேற்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதற்காக தற்காலிகமாக வாடிவாசல் அமைக்கப்பட்டது. பின்னர் அங்கு கொண்டு வரப்பட்ட 10 ஜல்லிக்கட்டு காளைகள் வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டன.
இளைஞர்கள் மடக்கி பிடித்தனர்
இதில் சீறிப்பாய்ந்த ஜல்லிக்கட்டு காளைகளை இளைஞர்கள் பலர் போட்டி போட்டு அடக்கினர். இதேபோல் வையம்பட்டி ஒன்றியப்பகுதி என்.பூலாம்பட்டியில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகளை ஜல்லிக்கட்டு வீரர்களும், இளைஞர்களும் பிடித்து அடக்கினர். சில காளைகள் பிடிபடாமல் ஓடின. இந்த 2 இடங்களிலும் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
நவல்பட்டு
மேலும் திருச்சி அருகே நவல்பட்டு மந்தைவெளியில் நேற்று காலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. மாடுபிடி வீரர்கள் அந்த பகுதியில் குவிந்தனர். நவல்பட்டு, பழங் கனாங்குடி, பூலாங்குடி, சோழமாதேவி, திருவெறும்பூர் பகுதிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டு வரப்பட்டிருந்தன.
மொத்தம் 35 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. மாடுபிடி வீரர்கள், இளைஞர்கள் பாய்ந்து சென்று மாடுகளை பிடித்து அடக்கினர். அப்போது மாடு முட்டியதில் ஒருவர் காயமடைந்தார். இதற்கிடையில் தடையை மீறி ஜல்லிக்கட்டு நடைபெறுவது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து ஜல்லிக்கட்டை பாதியில் நிறுத்தினர். இதேபோல கூத்தப்பார் கிராமத்தில் நேற்று மாலை தடையை மீறி ஜல்லிக்கட்டு நடந்தது. இளைஞர்கள், மாடுபிடி வீரர்கள் திரளாக கலந்து கொண்டு மாடுகளை அடக்கினர்.
சிறப்பு பூஜைகள்
தா.பேட்டையை அடுத்த கரிகாலி கிராமத்தில் ஜல்லிக்கட்டு மாடு விடும் விழா நடைபெற்றது. இதையொட்டி 7 ஜல்லிக்கட்டு மாடுகள் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து விநாயகர், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அப்போது விவசாயம் செழிக்கவும், மழைவேண்டியும் விவசாயிகள் பிரார்த்தனை செய்து ஜல்லிக்கட்டு மாடுகளை கோவிலை சுற்றி அழைத்து வந்து ஓட்டி சென்றனர்.

Next Story