எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 2:03 AM IST (Updated: 18 Jan 2017 2:03 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

பெரம்பலூர்,

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை

பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் புது பஸ்நிலைய பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் தொண்டர் களுக்கு இனிப்பு வழங்கினர்.இந்த நிகழ்ச்சியில் மருதைராஜா எம்.பி., பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், அணி நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் பெரம்பலூர் வட்டம் அம்மாபாளையம் கிராமத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. அப்போது அ.தி.மு.க.வினர் ‘கேக்’ வெட்டி அனைவருக்கும் வழங்கினர். இதில் அ.தி.மு.க. வினர், பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

திருமானூரில்...

அரியலூர் மாவட்டம் திருமானூரில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது ஒன்றிய செயலாளர் குமரவேல் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒன்றிய அலுவலகம் முன் பிருந்து ஊர்வலமாக வந்து பழைய போலீஸ் நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

லட்சிய தி.மு.க.

திருமானூரில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு லட்சிய தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் வினோத்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கட்சியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருமானூரில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு தே.மு.தி.க. சார்பில் அவரது உருவப்படத்திற்கு கட்சியின் முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தங்க ஜெயபால் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

ஜெயங்கொண்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.வினர் காந்தி பூங்காவில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்தனர். நிகழ்ச்சிக்கு ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் நகர செயலாளர், கட்சி நிர்வாகிகள், கட்சி பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story