எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
100-வது பிறந்தநாளையொட்டி அரியலூரில் எம்.ஜி.ஆர். சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தாமரைக்குளம்,
எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா
அரியலூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அரியலூரில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளரும், அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் ஒற்றுமைத்திடலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு, மார்க்கெட், கடை வீதி வழியாக வந்து மங்காயி பிள்ளையார் கோவில் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அன்னதானம்
பின்னர் அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதன்பிறகு பொதுமக்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாளை.அமரமூர்த்தி, துரை.மணிவேல், மாவட்ட மாணவரணி செயலாளர் சங்கர் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளைக்கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story