அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி உருவ பொம்மை எரிப்பு
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலாவின் சகோதரர் திவாகரன் சமீபத்தில் தஞ்சாவூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.
திருச்சி,
அவரது பேச்சுக்கு அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி நேற்று முன்தினம் கண்டனம் தெரிவித்திருந்தார். மேலும் திவாகரன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கூறியிருந்தார். இந்த கருத்திற்கு அ.தி.மு.க. அமைச்சர்கள் 6 பேர் கே.பி.முனுசாமிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழாவையொட்டி திருச்சியில் அ.தி.மு.க.வினர் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க நேற்று திரண்டனர். மாலை அணிவித்தபின் ஒரு பகுதியினர் தனியாக நின்றனர். வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானா அருகே அ.தி.மு.க. நிர்வாகி ராஜராஜ சோழன் தலைமையில் சிலர் திடீரென கே.பி.முனுசாமியின் உருவ பொம்மையை சாலையில் போட்டு எரித்தனர். மேலும் கே.பி.முனுசாமிக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ஷீலா மற்றும் போலீசார் விரைந்து வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இதற்கிடையில் போராட்டம் நடத்தியவர்கள் ஒவ்வொருவராக கலைந்து சென்றனர். 3 பேரை மட்டும் போலீசார் பிடித்து அவர்களின் பெயர், விவரத்தை சேகரித்தனர். இந்த திடீர் போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story