புதுக்கோட்டையில் தீபா ஆதரவாளர்கள் சாலை மறியல்
எம்.ஜி.ஆர்.சிலைக்கு ஊர்வலமாக சென்று மாலை அணிவிக்க தடை விதிக்கப்பட்டதால் புதுக்கோட்டையில் தீபா ஆதரவாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை,
மேலும் இவர்களை தடுக்க அ.தி.மு.க.வினர் உருட்டு கட்டையுடன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தீபா ஆதரவாளர்கள்
எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாள் விழாவை யொட்டி புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரியில் இருந்து, பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க போலீசாரிடம் அனுமதி பெற்று இருந்தனர்.
இதன்படி நேற்று முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட தயார் நிலையில் இருந்தனர்.
உருட்டு கட்டையுடன்...
இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு போடப்பட்டு உள்ள கதவில் பூட்டுப்போட்டு பூட்டினர். பின்னர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வரும், தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்துவதற்காக உருட்டு கட்டைகளுடன் காத்திருந்தனர். மேலும் புதிய பஸ் நிலையம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தீபா ஆதரவு பதாகையையும், அ.தி.மு.க.வினர் அகற்றினர்.
இதனால் பழைய பஸ் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் கடை வைத்து உள்ளவர்கள் உடனடியாக தங்களது கடைகளை மூடினார்கள். இது பற்றி தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டார்கள். மேலும் அந்த பகுதியில் போக்குவரத்தை போலீசார் தடை செய்தனர். இதைத்தொடர்ந்து வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டது.
மாலை அணிவிக்க தடை
இதனால் சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான போலீசார் மன்னர் கல்லூரி முன்பு திரண்டு இருந்த தீபா ஆதரவாளர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். அப்போது போலீசார், சட்டம் ,ஒழுங்கை கருத்தில் கொண்டு தீபா ஆதரவாளர்களை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதிக்கிறோம் என கூறினார்கள்.
இதனால் ஆத்திரமடைந்த தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி கார் உள்பட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 11 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக புதுக்கோட்டை மன்னர் கல்லூரி பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Next Story