நாகை பகுதிகளில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


நாகை பகுதிகளில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x
தினத்தந்தி 18 Jan 2017 4:15 AM IST (Updated: 18 Jan 2017 2:05 AM IST)
t-max-icont-min-icon

நாகை பகுதிகளில் பல்வேறு இடங்களில் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதில் அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நாகப்பட்டினம்,

பிறந்தநாள் விழா

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்த நாள் விழா நாகை பகுதிகளில் அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி நாகை நகராட்சி பகுதிகளில் உள்ள வார்டுகளில் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நாகை காடம்பாடி நகராட்சி நடுநிலைப்பள்ளி எதிரில் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுனர் அணி இணை செயலாளர் செந்தில் சிவக்குமார் தலைமையில் கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் நவாப்ஜான், நகர துணை செயலாளர் விநாயக் உள்பட பலர் கலந்து கொண்டனர். அதேபோல் கீழையூர் கடைத்தெருவில் அ.தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாளையொட்டி கட்சி கொடியேற்றப்பட்டது. பின்னர் ஈசனூரில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் தொகுதி செயலாளர் பால்ராஜ், ஒன்றிய செயலாளர் வேதையன், மாவட்ட இணை செயலாளர் மீனா, ஜெய லலிதா பேரவை ஒன்றிய செயலாளர் சதீஸ், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் பூவைவரதன் உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு

இதே போல தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் அவை.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். முன்னதாக வானவன்மகாதேவியில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் தமிழ்வாணன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் ரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கீழ்வேளூர்

கீழ்வேளூர் ஒன்றிய பகுதிகளில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா அ.தி.மு.க. சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ஒன்றிய செயலாளர் சிவா தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் அசோகன், மாவட்ட பிரதிநிதி அரசுகார்த்தி, ஊராட்சி செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவையொட்டி தேவூர் கடைத்தெருவில் அ.தி.மு.க. கொடி ஏற்றிப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மேலும், அகரகடம்பனூர், அத்திபுலியூர், வலிவலம், இருக்கை, ராதாமங்கலம், குருக்கத்தி உள்ளிட்ட 38 ஊராட்சிகளிலும் அ.தி.மு.க. கொடியேற்றப்பட்டு, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

Next Story