நாகையில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
நாகையில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்,
சாலை பாதுகாப்பு வார விழா
நாகையில் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாகை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் இதுகுறித்து அவர் கூறிய தாவது:-
வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிற இந்த காலகட்டத்தில், விபத்துகளும் பெருகி வருகிறது. இதனை தவிர்ப்பதற்கு, ஒவ்வொருவரும் சாலை விதிகளை பின்பற்றி நடக்க வேண்டும். பாதசாரிகள் சாலையை கடக்கும் போது, கவனமுடன் இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். சாலை விதிகளை கடைபிடித்து, விபத்தில்லாத தமிழகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
விழிப்புணர்வு பேரணி
பேரணியில் ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை சேர்ந்தவர்கள், வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள், மோட்டார் சைக்கிள் விற்பனை நிலைய முகவர்கள், தனியார் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், கோஷங்கள் எழுப்பியவாறும் சென்றனர். இந்த பேரணி, அண்ணாசிலை, காந்தி சிலை, பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் நிறைவடைந்தது. முன்னதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், நாகை மண்டலம் சார்பில் வைக்கப்பட்டிருந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பஸ்சை கலெக்டர் பழனிசாமி தொடங்கி வைத்து, செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அதிநவீன மின்னணு திரைவாகனத்தில் ஒளிப்பரப்பப்பட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறும்படத்தை பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன், ஆய்வாளர்கள் ஜெய்சங்கர், காஞ்சி, சத்யகுமார், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story